2011-01-24 15:17:06

70 இலட்சம் குழந்தைகளுக்கு தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து


சன 24, 2011. தமிழகத்தில் 40 ஆயிரத்து 399 மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட 70 இலட்சம் குழந்தைகளுக்கு இஞ்ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க 1995ம் ஆண்டு முதல் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் 40 ஆயிரத்து 399 மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஞாயிறன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசுத் துறைகள், ரோட்டரி சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் 70 இலட்சம் குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 16 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்திய அளவில், 42 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.