2011-01-24 15:17:19

2011 இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்


சன 24, 2011. உலக மக்கள் தொகை இந்த ஆண்டு இறுதியில் 700 கோடியைத் தொடும் என நேஷனல் ஜியாக்ரபிக்கின் ஆய்வு தெரிவிக்கிறது.

1800 ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 210 வருடங்களில் 700 கோடியாக உள்ளது.

நேஷனல் ஜியாக்ரபிக் இதழின் ஆய்வின் படி, உலகில் ஒரு வினாடிக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பதாகவும், அதில் இருவர் இறப்பதால், ஒவ்வொரு நொடிக்கும் மக்கள் தொகையில் மூன்று பேர் கூடிக் கொண்டே செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் ஏழாயிரம் மொழிகள் பேசக்கூடிய மக்கள் 194 நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இன்றைய உலகில் 21 உள்ளன.








All the contents on this site are copyrighted ©.