2011-01-22 15:58:11

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை


சன.22,2011. இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீண்டும் குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைச் சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.

இவ்வியாழனன்று வட பகுதிக்கு சென்று வந்தபின் நிருபர்களிடம் பேசிய அவர், அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் கூறினார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் பரக் கூறினார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த அவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மக்களின் வெள்ள நிவாரணத்துக்காக ஐந்து கோடியே பத்து இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.