2011-01-19 14:47:44

டுனிசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் கிளர்ச்சி மக்களுக்கானச் சுதந்திர தாகத்தின் வெளிப்பாடு - டுனிஸ் பேராயர்


சன.18,2011: வட ஆப்ரிக்க நாடான டுனிசியாவில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அரசியல் கிளர்ச்சி மக்களுக்குச் சுதந்திரம் எவ்வளவு தூரம் தேவைப்படுகின்றது என்பதையே காட்டுகின்றது என்று அந்நாட்டு டுனிஸ் பேராயர் மாரூன் எலியாஸ் லாஹாம் கூறினார்.

நாட்டை சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயகத்திற்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இது இருக்கின்றது என்று மிஸ்னா செய்தி நிறுவனத்திடம் கூறிய பேராயர் லாஹாம், அரபு நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்பதால், ஜனநாயகத்திற்கானப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு டுனிசியா மக்கள் பயந்து கொண்டிருந்தார்கள் என்றார்.

டுனிசியாவின் புதிய அரசு குறித்துக் கருத்துச் சொல்வதற்கு இது சரியான நேரமில்லை என்றும், அந்நாட்டின் 23 வருட சர்வாதிகார ஆட்சியில் புதிய தலைவர் எவரும் உருவானதாகத் தெரியவில்லை என்றும் பேராயர் கூறினார்.

டுனிசியாவில் 99 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். இந்நாட்டில்தான் புனித அகுஸ்தீன் பிறந்தார். இவர் பிறந்ததன் 1650ம் ஆண்டை முன்னிட்டு 2005ல் கார்த்தேஜ் நகரில் அருங்காட்சியகம் வைக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.