2011-01-19 12:47:05

ஜனவரி 20.. – வாழ்ந்தவர் வழியில்........,


1937 இலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர்கள் பதவியேற்கும் நாளாக இருந்து வருகிறது சனவரி 20. அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர்கள் என்றவுடன் உலக மக்களிடையே பிரபலமானவர் என்ற வகையில் முதலில் தெரிய வரும் ஜான் எஃப். கென்னடி குறித்து இன்று காண்போம். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 35வது குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி எனும் ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி, 1917 மே 29ந் தேதி பிறந்தார். அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 நவம்பர் 22 வரை, அதாவது அவர் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். புலிட்சர் விருது பெற்ற அமெரிக்கத் தலைவர் இவர். கம்பீரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட கென்னடி, அமெரிக்கர்களால் மட்டுமல்ல; உலக மக்களாலும் நேசிக்கப்பட்டார். அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டுக்கு நீ என்ன தொண்டாற்றினாய் என்று எண்ணிப் பார். இது ஜான் கென்னடியின் மிகப் பிரபலமான பொன்மொழி.








All the contents on this site are copyrighted ©.