2011-01-18 14:22:37

திருப்பீட அதிகாரிகளை சந்தித்து உரையாடினார் யுனெஸ்கோ பொது மேலாளர்


சனவரி18,2011. இத்திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கும் யுனெஸ்கோ பொது மேலாளர் இரினா பொகோவாவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறைகளில் இரு தரப்பினரும் ஆற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகைத்துறை அறிவித்தது.

அனைவருக்குமான தரமான கல்வியை உறுதி செய்வதன் அவசியம், ஒன்றிணைந்த முழுமனித வளர்ச்சியை ஊக்குவித்தல், உலகப் பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், கலாச்சாரங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்றவைகள் குறித்தும் இச்சந்திப்பின் போது யுனெஸ்கோ தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருத்தந்தையுடன் ஆன சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயையும் வெளிநாடுகளுடன் ஆன உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தியையும் சந்தித்து உரையாடினார் இரினா பொகோவா.








All the contents on this site are copyrighted ©.