2011-01-18 14:37:41

உலக எரிசக்தி மாநாடு -2011: அபுதாபியில் தொடங்கியது


சன.18,2011. எதிர்கால எரிசக்தி தேவை குறித்த உலக மாநாடு ஐக்கிய அரபு எமிரேட் நாடான அபுதாபியில் இத்திங்களன்று தொடங்கியது.

4 நாட்கள் இடம் பெறும் இம்மாநாட்டில் உலகில் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தலைவர்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூதர்கள் கலந்துகொள்கின்றனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் எரிசக்தியினை பயன்படுத்துவது குறித்தும் அவற்றை எப்படி கையாளுவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காகவும் எதிர்கால எரிசக்தி தேவை குறித்த உலக மாநாடு இடம் பெற்று வருகிறது.








All the contents on this site are copyrighted ©.