2011-01-18 14:37:25

இந்தோனேசிய அரசுத்தலைவர், சமயத் தலைவர்கள் சந்திப்பு


சன.18,2011. இந்தோனேசியாவின் முன்னேற்றத்தின் மீதான அக்கறையினாலேயே அந்நாட்டு சமயத் தலைவர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

இந்தோனேசிய அரசுத்தலைவர் Bambang Yudhoyonoக்கும் அந்நாட்டின் சமயத் தலைவர்களுக்கும் இடையே இத்திங்களன்று இடம் பெற்ற கூட்டத்தில் பேசிய கப்புச்சின் சபை ஆயர் Martinus Dogma Situmorang, சமயத் தலைவர்கள் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள் என்றார்.

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடு உயர உதவியிருப்பதைப் பாராட்டிய அத்தலைவர்கள், வளங்களைச் சமமாகப் பங்கிடும் நடவடிக்கையில் அரசு தவறியுள்ளது என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தனர்.

மதத்தின் பெயரிலும் ஊடகவியலாளருக்கு எதிராகவும் வன்முறைகள் இடம் பெறுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்








All the contents on this site are copyrighted ©.