2011-01-17 15:37:54

வியட்நாம் நாட்டில் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மற்றும் வேளாண்மை மேம்பாட்டிற்காக உழைக்க உள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.


சன 17, 2011.  வியட்நாம் நாட்டில் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மற்றும் வேளாண்மை மேம்பாட்டிற்காக உழைப்பதை இவ்வாண்டிற்கான இரு முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.

கணவனில்லாத தாய்மார்கள், திருமணம் புரியாமல் கர்ப்பம் தாங்கிய பெண்கள் ஆகியோருக்கு உதவிகளை வழங்குவதுடன், இளையோருக்கானப் பாலியல் கல்வி குறித்தும் திட்டமிட்டுள்ளதாக வியட்நாம் காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் நல்ல விளைச்சலைத் தரும் வேளாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்குக் கற்றுத்தர உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.