2011-01-15 13:18:33

தென் கொரியாவில் வயதானக் கத்தோலிக்கருக்கென ஒரு நகரம்


சன.15,2011. தென் கொரியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி வயதானக் கத்தோலிக்கருக்கென ஒரு நகரத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது அந்நாட்டுத் தலத்திருச்சபை.

இத்திட்டம் குறி்த்து அறிவித்த தென் கொரிய Incheon மறைமாவட்ட வெகுஜனத் தொடர்பு அலுவலகத் தலைவர் Justina Kang, தென் கொரியாவில் முதன்முறையாக ஒரு மறைமாவட்டம் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது என்றார்.

60ம் அதற்கு மேற்பட்ட வயதினருக்குமென உருவாக்கப்படவிருக்கும் இந்நகரம் 2013ம் ஆண்டில் நிறைவடையும் என்றார் Kang.

இந்நகரத்தில் 237 குடும்பங்கள் வரை வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

2005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அந்நாட்டின் 4 கோடியே 80 இலட்சம் பேரில் 10 விழுக்காட்டினர் 65ம் அதற்கு மேற்பட்ட வயதினருமாவர். இது 2020ம் ஆண்டில் 15 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.