2011-01-14 15:33:56

குடியேற்றதாரர் மற்றும் அகதிகளை உபசரிக்குமாறு மெக்சிகோ ஆயர் அழைப்பு


சன.14,2011. மெக்சிகோ நாட்டின் தென்பகுதி வழியாக நுழையும் குடியேற்றதாரர் மற்றும் அகதிகளை அந்நாட்டுக் கத்தோலிக்கர் நன்கு உபசரிக்குமாறு Durango துணை ஆயர் Enrique Sanchez Martinez கேட்டுள்ளார்.

சனவரி 16ம் தேதி இஞ்ஞாயிறன்று உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மேய்ப்புப்பணி கடிதம் அனுப்பியுள்ள ஆயர் Sanchez, மெக்சிகோ மக்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் எவ்வாறு வரவேற்கப்பட வேண்டுமென்று விரும்புகிறோமோ அவ்வாறே தாங்களும் நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளறியேறக் கட்டாயப்படுத்தப்படும் அகதிகளின் நெருக்கடி நிலைகளை மறக்கக் கூடாது என்றும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

தற்சமயம் உலகில் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் சரியான ஆவணங்களுடன் உள்ளனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.