2011-01-14 15:35:10

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கை மக்களுக்கு ஐநா உதவி


சன.14,2011. அண்மை வாரங்களில் இலங்கையைத் தாக்கிய கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு அரசோடு இணைந்து உதவிகளைச் செய்வதற்கு ஐ.நா.நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

வரும் வாரங்களில் இலங்கைக்கான அவசரகால உதவிகளுக்கும் விண்ணப்பிக்க இருப்பதாக OCHA என்ற மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.

அதேநேரம், அந்நாட்டில் அதிகரித்து வரும் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கானப் பல்வேறு வழிகளில் அரசுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் அவ்வலுவலகம் அறிவித்தது.

இலங்கை தேசிய பேரிடர் நிர்வாக மையத்தின் கணிப்புப்படி வெள்ளத்தால் பத்து இலட்சத்து 81 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 350 பேர் புலம் பெயர்ந்து 591 மையங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.