2011-01-13 15:06:42

ஹெயிட்டியில் இடிந்து விழுந்த பேராலயத்தின் முன்பாக முதலாண்டு நினைவுத் திருப்பலி


சன.13,2011. கடந்த ஆண்டு சனவரி 12 ஹெயிட்டியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த Port-Au-Prince உயர்மறைமாவட்டப் பேராலயத்தின் முன்பாக அந்நாட்டு கத்தோலிக்கர்கள் இப்புதனன்று முதல் ஆண்டு நினைவைச் செப வழிபாடு, திருப்பலி ஆகியவைகளுடன் அனுசரித்தனர்.
திருத்தந்தையின் சார்பாக ஹெயிட்டிக்குச் சென்றுள்ள Cor Unum அவைத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா திருப்பலியை நிறைவேற்றி, திருத்தந்தையின் தந்திச் செய்தியை வாசித்தார்.
சனவரி 12 அந்நாட்டில் விடுமுறையாகவும் ஒரு செபநாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் முகப்பில் நடந்த செப வழிபாட்டிலும் திருப்பலியிலும் அந்நாட்டின் பிரதமர் மற்றும் அந்நாட்டின் அரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பல வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.பேராலயத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த Port-Au-Prince உயர்மறைமாவட்டப் பேராயர் Joseph Serge Miot ம், இன்னும் உயிரிழந்த பிறரும் இத்திருப்பலியில் சிறப்பாக நினைவு கூரப்பட்டனர். இத்திருப்பலி நேரத்தில் பேராயர் Miotக்கு அடுத்தபடியாக அவ்வுயர்மறைமாவட்டப் பேராயராகப் பொறுப்பேற்கும் ஆயர் Guire Poulardன் நியமனம் அறிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.