2011-01-13 15:06:57

நியூயார்க் ஐ.நா.தலைமையகத்தில் ஹெயிட்டி நில நடுக்கத்தின் முதலாண்டு நினைவு


சன.13,2011. ஹெயிட்டியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் முதலாண்டு நினைவு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இப்புதன் பிற்பகல் ஐ.நா. தலைமையகத்தில் நிகழ்ந்த இந்நினைவுச் சடங்கில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் மலர் வளையம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, ஐ.நா. அலுவலர்கள் அனைவரும் சென்ற ஆண்டு ஹெயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 47 நொடிகளின் நினைவாக அதே கால அளவு அமைதியைக் கடைபிடித்தனர்.
ஹெயிட்டி Port Au Princeல் நிகழ்ந்த சடங்குகளில் ஐ.நா. பொதுச்செயலரின் பிரதி நிதியாக Le Roy கலந்து கொண்டு பான் கி மூன் அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.2010ம் ஆண்டு சனவரி 12 அன்று நடந்த இப்பெரும் நிலநடுக்கத்தில் ஐ.நா.வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு 102 ஐ.நா.பணியாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.