2011-01-12 16:00:19

குரோவேசியாவில் இயேசு சபை குருவான Boscovich ஆண்டு கொண்டாடப்படுகிறது


சன.12, 2010. குரோவேசிய அரசு 2011ம் ஆண்டினை இயேசு சபை குருவான Boscovich ஆண்டாக அறிவித்துள்ளது.
1711ம் ஆண்டு குரோவேசியாவில் பிறந்த Rogelio Joseph Boscovich Bettera (1711-1787) கணிதம், இயற்பியல், வானியல், கட்டிடக்கலை, மெய்யியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அறிவுத்திறன் பெற்றிருந்தார். இயேசு சபை குருவான Boscovich, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம், மிலான் நகரில் உள்ள பேராலயம் ஆகியவற்றின் மேல் கோபுரங்களை மேலும் உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தவர். வானியலில் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்தவர் இந்த இயேசு சபைக் குரு.இவரது பிறந்த ஆண்டின் மூன்றாம் நூற்றாண்டை குரோவேசிய அரசும் UNESCO வும் அறிவித்துள்ளன. இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களையொட்டி, குரோவேசியாவில் உள்ள Zagrebல் மெய்யியல் துறை ஒரு பன்னாட்டு கருத்தரங்கை வரும் நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.