2011-01-11 15:23:10

178 நாடுகளுடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளது வத்திக்கான் நாடு.


சன 11, 2011. உலகின் 178 நாடுகளுடன் முழு அரசியல் உறவை வத்திக்கான் நாடு கொண்டுள்ளதாக இத்திங்களன்று திருப்பீடப் பத்திரிகைத்துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

இது தவிர, தனிச்சிறப்பான விதத்தில் ஐரோப்பிய ஒன்றிப்பு அவையுடனும் பாலஸ்தீனிய விடுதலை அமைப்புடனும் அரசியல் உறவைக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் சிறப்புப் பார்வையாளர் தகுதி வழங்கப்பட்டுள்ளதும் திருப்பீட பத்திரிகைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டில் ஜெர்மனியின் சில பகுதிகளோடும், போஸ்னியா ஹெர்ஸெகொவினாவோடும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகியவைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, ஆப்ரிக்க நாடுகளான மலாவி, கபோன் மற்றும் சாடுடன் ஆன அரசியல் பிரதிநிதித்துவம் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.