2011-01-10 14:12:22

ஹெய்ட்டியில் பள்ளிகள், ஆலயங்கள் மீண்டும் கட்டுவதற்குத் திருத்தந்தை நிதி உதவி


சன.10,2011. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இப்புதனோடு ஓராண்டு நிறைவடையும் வேளை, அந்நாட்டில் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கெனத் திருத்தந்தையின் சார்பில் நன்கொடைகளை வழங்கினார் திருப்பீடத்தின் கோர் ஊனும் அவைத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா.

திருத்தந்தையின் பிரதிநிதியாக ஹெய்ட்டி சென்றுள்ள கர்தினால் சாரா, நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ள பள்ளிகளைச் சீரமைப்பதற்கு 8 இலட்சம் டாலரும் ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கு 4 இலடசம் டாலரையும் திருத்தந்தையின் சார்பில் இத்திங்களன்று வழங்கினார்.

ஹெய்ட்டி அரசுத் தலைவர் René Préval ஐ இச்செவ்வாயன்று சந்திக்கும் கர்தினால், மக்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் முகாமைப் பார்வையிட்டு திருப்பலியும் நிகழ்த்துவார்.

ஓராண்டு நிறைவு நாளான இப்புதனன்று திருப்பலி நிகழ்த்தித் திருத்தந்தையின் செய்தியையும் வாசிப்பார் கர்தினால் இராபர்ட் சாரா.

மேலும், ஹெய்ட்டியில் இன்னும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர், இவர்களில் 3,80,000 பேர் சிறார் என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பான யூனிசெப் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.