2011-01-10 14:12:06

ஹெய்ட்டி மக்களுக்காகத் திருத்தந்தை செபம்


சன.10,2011. மேலும், ஹெய்ட்டி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஓராண்டு நிறைவையும் மூவேளை செப உரைக்குப் பின்னர் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், காலராவினாலும் அம்மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர் என்றார்.

துன்புறும் ஹெய்ட்டி மக்கள் மீது தானும் அகிலத் திருச்சபையும் கொண்டிருக்கும் கரிசனையைத் தெரிவிப்பதற்காகத் திருப்பீடத்தின் கோர் ஊனும் அவைத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அந்நாட்டிற்குச் சென்றுள்ளதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இன்னும், சனவரி முதல் தேதியன்று எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவில் வன்முறைக்குப் பலியான காப்டிக் ரீதிக் கத்தோலிக்கருடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதற்காக இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 200 இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துச் சொன்னார் திருத்தந்தை.

சமய சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு கூடியிருந்த இவர்களைப் பாராட்டிய அவர், இவர்களோடு சேர்ந்து தானும் காப்டிக் கிறிஸ்தவர்களுடனானத் தனது நெருக்கத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.