2011-01-07 14:53:30

மலேசியா: பயங்கரவாதம் பற்றிய பாடங்கள் குறித்து அரசு கடும் எச்சரிக்கை


சன.07,2011. மலேசியாவில் உள்ள தமிழ், சீக்கிய, முஸ்லிம் பள்ளி மற்றும் கல்லூரிகள் சிலவற்றில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன என, அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழல் காணப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் கூறினார்.

கல்விக் கூடங்கள் பயங்கரவாத பயிற்சிக் கூடங்களாக செயல்படுகிறதா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போதைக்கு பயங்கரவாதத்தால் மலேசியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்பதற்காக நாங்கள் அலட்சியமாக இருந்து விட மாட்டோம் என்று ஹிஷாமுதீன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.