2011-01-07 14:47:52

தென்கொரியப் பிரிந்த கிறிஸ்தவ சபை அரசின் புதிய வளர்ச்சித் திட்டத்திற்கு எதிர்ப்பு


சன.07,2011. தென்கொரிய அரசின் புதிய வளர்ச்சித் திட்டத்தில் ஆயிரக்கணக்கான பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்கள் அழிக்கப்படும் என்பதால் அரசு அத்திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு பிரிந்த கிறிஸ்தவ சபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரிய கிறிஸ்தவ அவையின் கணிப்புப்படி, அரசின் புதிய வளர்ச்சித் திட்டத்தில் தேவையற்ற கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றும் இதில் 12 ஆயிரம் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்கள் அழிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்றும் இச்சபை வலியுறுத்தியுள்ளது








All the contents on this site are copyrighted ©.