2011-01-07 14:48:48

தென் சூடானில் வாக்காளர்களின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்கு ஐ.நா. அழைப்பு


சன.07,2011. தென் சூடானின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இஞ்ஞாயிறு பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் வாக்காளர்களின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்கு வடக்கு மற்றும் தெற்குப் பகுதித் தலைவர்கள் ஆவன செய்யுமாறு ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

தென் சூடான் தனி நாடாக செயல்படுவதைத் தீர்மானிக்கும் இந்தக் கருத்து வாக்கெடுப்பு இம்மாதம் 9 முதல் 15 வரை நடைபெறும். 2005ம் ஆண்டு அமைதி உடன்படிக்கையை அமல்படுத்துவதன் உச்ச கட்டமாக இவ்வாக்கெடுப்பு இருக்கின்றது.

இவ்வாக்கெடுப்பு, சூடான் வரலாற்றில் உச்ச கட்ட நிகழ்வாகும் என்று நவநீதம்பிள்ளை கூறினார்







All the contents on this site are copyrighted ©.