2011-01-07 14:51:47

சீனா: பிள்ளைகள் பெற்றோரைச் சந்திக்கச் சட்டம்


சன.07,2011. வயதான தமது பெற்றோரை போய்ச் சந்திப்பதை கட்டாயக் கடமையாக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வர சீனா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளைக் கையாள அரசு முயற்சித்து வருகிறது.

தமது பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் வயதான பெற்றோர்கள் தம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பேண வேண்டும் என்று நீதிமன்றத்தில் போய் உரிமை கோரும் வகையில் சட்ட திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகச் சீன அதிகாரி ஒருவர் அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

வயதானப் பெற்றோர்களைப் பராமரிப்பது என்பது சீனக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்தாலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான புலம்பெயர்வு மற்றும் வேலை நிமித்தமான அழுத்தங்கள் காரணமாக சீனாவில் குடும்ப உறவுகளுக்கு இடையேயான நெருக்கம் குறைந்து வருகிறது என்று கூறப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.