2011-01-05 15:31:30

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தசீர் உடல் பலத்தப் பாதுகாப்புடன் அடக்கம்


சன.05, 2011. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தசீர் இச்செவ்வாய்க் கிழமை அவரது மெய்காப்பாளரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் இப்புதனன்று பலத்தப் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீர் அந்நாட்டின் தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களிடமிருந்து அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன என்பதை ஆளுநர் தசீர் கூறி வந்தார் என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தேவநிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபியின் விடுதலைக்காகவும் ஆளுநர் தசீர் போராடி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் தசீர் குரல் கொடுத்து வந்ததால், அவரைத் தான் கொன்றதாக அவரது மெய்க்காப்பாளர் காவல் துறையிடம் சரண் அடைந்த போது கூறினார்.







All the contents on this site are copyrighted ©.