2011-01-04 14:28:35

சமய சுதந்திரம் குறித்தத் திருத்தந்தையின் உலக அமைதி தினச் செய்தி இலங்கைக்கு மிகவும் முக்கியமானது - மனித உரிமை ஆர்வலர்


சன.04,2011. சமய சுதந்திரம் குறித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உலக அமைதி தினச் செய்தி இலங்கையின் இன்றைய நிலைமைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது என்று அரசியல் விமர்சகரும் மனித உரிமை ஆர்வலருமான அருட்திரு ரெய்ட் ஷெல்ட்டன் ஃபெர்னாண்டோ கூறினார்.

கடந்த காலத்தில் தவறுகள் செய்யப்பட்டிருந்தால், இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தவக்கால முதல் ஞாயிறன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் செய்தது போல, கிறிஸ்தவர்களும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார் அருட்திரு ஷெல்ட்டன்.

இலங்கை இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான இவர் ஆசிய செய்தி நிறுவனத்திடம் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உலக அமைதி தினச் செய்திக் குறித்துக் கருத்துத் தெரிவித்த போது இவ்வாறு கூறினார்.

இலங்கையில் நான்கு பெரிய மதங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவருக்கெதிராக நேரிடையாக மத அடக்குமுறைகள் இடம் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.