2011-01-04 14:40:05

19 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா


சன.04,2011 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு அவையில் தாற்காலிக உறுப்பினராக இத்திங்கள்கிழமை பொறுப்பேற்றது.

இந்த பொறுப்பை இந்தியா இரண்டு ஆண்டுகாலம் வகிக்க முடியும். ஏற்கெனவே 7 முறை இதுபோன்று தாற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, போர்ச்சுக்கல, ஆகிய நாடுகளும் தாற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டன. ஏற்கெனவே போஸ்னியா, பிரேசில், காபோன், லெபனன், நைஜிரீயா ஆகிய நாடுகள் தாற்காலிக உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் அதிகாரமிக்க ஐ.நா. பாதுகாப்பு அவைத் தலைவராகும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது








All the contents on this site are copyrighted ©.