2011-01-03 15:38:31

புத்தாண்டு தின தாக்குதலுக்கு உள்ளான எகிப்து கோவிலில் வழக்கம் போல் திருப்பலிக் கொண்டாட்டங்கள்.


ஜன 03, 2010. புத்தாண்டு தின நள்ளிரவுத் திருப்பலிக்குப் பின் 21பேரின் உயிரிழப்புக்கும் 90க்கும் மேற்பட்டோரின் காயத்திற்கும் காரணமான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளான எகிப்தின் அலக்ஸாண்டிரியா அனைத்து புனிதர் கோவிலில் ஞாயிறு தின திருப்பலிக் கொண்டாட்டங்கள் விசுவாசிகளின் பங்கேற்புடன் அமைதியாக இடம்பெற்றன.

எகிப்தில் அண்மை ஆண்டுகளிலேயே மிகப்பெரியது என எண்ணப்படும் கிறிஸ்தவர்கள் மீதான இத்தாக்குதல் குறித்து ஏற்கனவே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த காப்டிக் கிறிஸ்தவ கோவில் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து தன் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்ட உலக கிறிஸ்தவக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் Olav Fykse Tveit, அரசின் உடனடி நடவடிக்கைகளுக்கும், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியரிடையேயான ஒருமைப்பாட்டிற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.