2011-01-03 15:39:40

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 2கோடி மக்களுள் பெரும்பான்மையினோருக்கு இன்னும் உதவிகள் தேவைப்படுகிறது.


ஜன 03, 2010. கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 2கோடி மக்களுள் பெரும்பான்மையினோருக்கு இன்னும் உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் உள்கட்டுமானப் பணிகள் நிறைவுற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறும் ஐநா அதிகாரிகள், சர்வதேச நாடுகளின் உதவியுடன் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கென 200கோடி டாலர்களுக்கு பாகிஸ்தான் நாடு கடந்த செப்டம்பரில் விண்ணப்பித்திருக்க, இதுவரை இதில் 51 விழுக்காடே கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.