2011-01-03 15:38:43

ஏழ்மையை எதிர்த்துப் போரிட பிலிப்பீன்ஸ் ஆயர்களின் அழைப்பு.


ஜன 03, 2010. பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களைக் கீழ்மைப்படுத்தும் ஏழ்மை, அநீதி மற்றும் அமைதியற்ற நிலைகளை எதிர்த்துப் போரிட அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை.

மாய நிலைகள் நம்மையே அழிக்கும் முன்னால், உண்மை நிலைகள் குறித்து நாம் விழித்தெழவேண்டும் என்கிறது ஆயர்களின் அறிக்கை.

ஆயர்களின் சார்பில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் நெரெயோ ஓட்சிமர், இப்பிரச்சினையானது நிலமற்ற ஏழைகளிலும், வேலை வாய்ப்பற்ற மக்களிலும், வீடற்ற நகர்வாசிகளிடமும், குடியிருப்புக்களை இழந்த பழங்குடியினரிடையேயும் அதிகமாகக் காணக்கிடக்கின்றது என்றார்.

ஏழ்மையை விரட்டும் ஒரு முயற்சியாக, மக்கள் தொகையைக் குறைக்க செயற்கைக் கருத்தடை முறைகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளையும் குறைகூறிய ஆயர் பேரவைத்தலைவர், இலஞ்ச ஊழலை எதிர்த்துப் போரிடுவதன் மூலம் எழ்மையை ஒழிக்க முடியும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.