2010-12-30 13:24:15

டிசம்பர் 31 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1492 – இத்தாலியின் சிசிலியில் இருந்து 1,00,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1600 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.

1881 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.

1923 - லண்டனின் பிக்பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிரிந்தது.

1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டன.

2004 - உலகின் மிக உயரமான வானுயுரத் தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2006 - இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன் அமெரிக்க ஐக்கிய நாட்டிடமிருந்து பெற்ற கடன்களை முழுவதுமாக கட்டி முடித்தது.








All the contents on this site are copyrighted ©.