2010-12-29 14:57:50

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த அயல் நாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பிலிப்பின்ஸ் ஆயர் மகிழ்ச்சி


டிச.29, 2010. தெற்கு பிலிப்பின்ஸ் பகுதிகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏழு அயல் நாட்டு நிறுவனங்கள் தாங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறியிருப்பதற்குத் தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர்.

தங்கள் நாட்டின் இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் அளவுக்கதிகமாய் பாதித்து வந்த இந்த நிறுவனங்கள் தங்கள் சுரங்கத் தொழிலை நிறுத்தியிருப்பது நாட்டுக்குக் கிடைத்த நல்ல செய்தி என்று பிலிப்பின்சின் Marbel மறைமாவட்ட ஆயர் Diunaldo Gutierrez கூறினார்.

இந்நிறுவனங்கள் தங்கள் தொழிலை நிறுத்துவதால், பல ஆயிரம் மக்கள் தங்கள் வேலைகளை இழக்கும் நிலையில் உள்ளனர் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பாக, ஆயர் Gutierrez பேசுகையில், இந்தச் சுரங்கம் தோண்டும் தொழிலால் பிலிப்பின்ஸ் அரசோ, மக்களோ எவ்வித பயனும் அடையவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
இதே கருத்தை Sorsogon மறைமாவட்டத்தின் ஆயர் Arturo Bastesம் வெளிப்படுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.