2010-12-29 14:58:50

கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலி முடிந்து ஒரு சில மணி நேரங்களில் இடிந்து விழுந்த கோவிலின் கூரை


டிச.29, 2010. கிறிஸ்மஸ் நள்ளிரவுத் திருப்பலி முடிந்து ஒரு சில மணி நேரங்களில் பெல்ஜிய நாட்டின் Diepenbeek என்ற இடத்திலிருந்த ஒரு கோவிலின் கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.

அமைதியின் அரசி என்ற பொருள்படும் Regina Pacis என்ற கோவிலில் கத்தோலிக்கர்கள் தங்கள் வழக்கமான நடு இரவுத் திருப்பலியில் ஈடுபட்டனர். திருப்பலி முடிந்து ஒரு சில மணி நேரங்களில் அக்கோவிலின் கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. கூரையின் மீது சேர்ந்திருந்த பனியின் கனம் தாங்காமல் அக்கூரை இடிந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இடிபாட்டினால் யாரும் பாதிக்கப்படவில்லை.
நள்ளிரவுத் திருப்பலியின் போது இந்த விபத்து நிகழ்ந்திருந்தால், பலர் உயிரிழந்திருப்பர் என்றும் கடவுளின் கருணையும், மக்களின் செபங்களும் அவர்களைக் காத்ததென்றும் கோவிலைச் சுற்றி வாழும் மக்கள் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.