2010-12-29 14:58:24

ஏழை மக்களின் இதய நோய்களைப் போக்கும் பணியில் கத்தோலிக்கக் குரு


டிச.29, 2010. மத்திய இந்தியப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் இதய நோய்களைப் போக்கும் நோக்கத்துடன் கத்தோலிக்கக் குரு ஒருவர் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்.

போபால் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை சின்னப்பன் பொன்னுசாமியின் தொடர்ந்த பணியால் அண்மையில் அம்ரீன் பானு என்ற ஒன்பது வயது சிறுமியின் இதயத்தில் இருந்த ஒரு ஓட்டை அறுவை சிக்கிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. அம்ரீன் பானு அருள்தந்தை பொன்னுசாமியின் உதவியைப் பெரும் 165வது நபர் என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான ஏழைகள் உயர்ந்த மருத்துவ உதவிகள் பெற வசதிகள் இல்லாதவர்கள் என்றும், அவர்களில் பலர் எழுத்தறிவும் இல்லாததால், மருத்துவ உதவிகள் பெறும் வழிகளையும் அறியாமல் உள்ளனர் என்றும் கூறிய அருள்தந்தை பொன்னுசாமி, தான் ஏழு ஆண்டுகளுக்கு முன் போபால் அரசு மருத்துவ மனையில் கண்ட ஓர் அதிர்ச்சியான நிகழ்வே தன்னை இந்தப் பணியில் ஈடுபடுத்தியது என்று கூறினார்.
இதுவரை தன் உதவி பெற்றவர்களில் இருவர் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியரும் இந்துக்களுமே என்றும் அருள்தந்தை சின்னப்பன் பொன்னுசாமி மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.