2010-12-28 15:35:38

சீனாவில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் விடுதலை செய்யப்படுமாறு ஹாங்காங் ஆயர் வலியுறுத்தல்


டிச.28,2010. சீனாவில் சிறையிலுள்ள Liu Xiaobo, Zhao Lianhai மற்றும் பிற மனித உரிமைகள் ஆர்வலர்கள் விடுதலை செய்யப்படுமாறு சீன அரசை வலியுறுத்தியுள்ளார் ஹாங்காங் ஆயர் ஜான் டோங் ஹான்.

தனது கிறிஸ்ம்ஸ செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ள ஆயர் டோங், சீனாவில் அதிகமான மத சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்ததற்காகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்துக் குருக்களையும் விடுதலை செய்யுமாறும் சீன அரசைக் கேட்டுள்ளார்.

மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவிடம் செல்வதற்கு அவர்களை வழிநடத்திய விண்மீன் போன்று சீனாவில் சிறையிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்த முடியும் என்றும் அச்செய்தியில் ஆயர் டோங் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளுக்காகப் போராடியதற்காக Liu Xiaoboம் கெட்டுப்போன பால் விவகாரம் குறித்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக Zhao Lianhai ம் சிறையில் உள்ளனர். Liu Xiaobo இவ்வாண்டு நொபெல் அமைதி விருதைப் பெற்றவர்.







All the contents on this site are copyrighted ©.