2010-12-28 15:38:03

கந்தமால் தீர்ப்பு குறித்து கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி


டிச.28,2010. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைத் தாக்குதல் தொடர்பாக ஒன்பது முக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், இந்துமதத் தீவிரவாதத் தலைவர் ஒருவர் உட்பட ஒன்பது பேருக்கு சிறையில் ஐந்தாண்டுகள் கடின வேலையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அபராதத்தை அவர்கள் செலுத்தவில்லையெனில் சிறைத் தண்டனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

கந்தமால் மாவட்டத்தில் Damangpadar கிராமத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளை எறித்தக் குற்றச்சாட்டில் இந்த ஒன்பது பேருக்கு இத்திங்களன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.