2010-12-28 15:39:01

இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களின் சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசு உழைக்கின்றது - அரசுத்தலைவர்


டிச.28,2010. இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களின் சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசு தன்னை அர்ப்பணித்துள்ளது என்று அந்நாட்டு அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyono தனது கிறிஸ்ம்ஸ செய்தியில் கூறியுள்ளார்.

நாடடின் பன்மைத்தன்மை, சமய சுதந்திரம், மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மை, பல்சமய விசுவாசிகள் ஒருவர் மற்றவரை மதித்தல் போன்ற பண்புகளைக் கட்டிக் காப்பதற்கு அரசு தன்னை அர்ப்பணித்துள்ளது என்று அரசுத்தலைவர் கூறினார்.

தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியக் கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேசிய விழாவில் கலந்து கொண்ட சுமார் 5,000 கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு கூறினார் அரசுத்தலைவர் Yudhoyono.

இந்தோனேசியாக் கிறிஸ்தவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்குத் தங்களது மதத்தைத் தூண்டுகோலாகக் கொண்டிருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.