2010-12-27 14:45:01

டிசம்பர் 28 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த ஊரில் தொடர்ந்து பெய்த கனமழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அச்சமயம் ஒரு சிறுவன் அந்த ஆற்றுத் தண்ணீரில் சிக்கி வெளியேற எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தான். அதைத் தற்செயலாகப் பார்த்த பெரியவர் ஒருவர் நீரில் குதித்து சிறுவனைக் காப்பாற்றினார். மூர்ச்சை தெளிந்த சிறுவன் அந்தப் பெரியவரை நன்றியோடு கைகூப்பினான். அதற்கு அப்பெரியவர், தம்பி, நீ வாழ வேண்டியவன். எனவே உனது வாழ்க்கையை நம்பிக்கையுடன் தொடங்கு என்றார்.

அன்று இயேசு பாலனைக் கொல்லத் தேடிய மன்னன் ஏரோது, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லக் கட்டளையிட்டான். தாய்மார்க் கதறக் கதறக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த ஏரோது கி.மு.34ல் தனது சகோதரன் ஜோசப்பையும் கி.மு.29ல் தனது மனைவி மரியமெனையும் அதற்குச் சில மாதங்கள் கழித்து தனது தாய் அலெக்சாண்ட்ராவையும் இப்படி இன்னும் சில நெருங்கிய உறவுகளையும் கொன்ற இரத்த வெறியன். இவனது பதவி வெறியினால் கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளுக்குத் திருச்சபை டிசம்பர் 28 அன்று விழா எடுக்கின்றது.

உலகிற்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் முகம் தாங்கிய அன்புக் கடிதங்கள் என்றார் அருளாளர் அன்னை தெரேசா.







All the contents on this site are copyrighted ©.