2010-12-23 15:40:06

மதுரை புனித வளனார் கோவில் பொன் விழா


டிச.23, 2010. மதுரை : “மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் கோவில் பொன் விழா டிச.26 முதல் 28 வரை நடக்கிறது” என பங்குத்தந்தை லூயிஸ், பங்கு பேரவைச் செயலாளர் ஜோசப் சேவியர் ராஜா, உதவி பங்குத் தந்தை இயேசு கருணா ஆகியோர் கூறினர்.

அவர்கள் கூறியதாவது: மதுரா கோட்ஸ் மில்லில் அதிகம் பணிபுரிந்த கத்தோலிக்கர்களுக்காக, கரிமேட்டில் அந்தோணியார் கோவில் கட்டப்பட்டது. பங்குத்தந்தை பிரிட்டோ, ஞானஒளிவுபுரத்தில் 1956ல் புனித வளனார் கோவிலைத் துவக்கினார்.

மதுரை மறைமாநிலத்தின் முக்கியப் பங்குகளில் ஒன்றான ஞானஒளிவுபுரம் பங்கின் பொன்விழாவையொட்டி, புனித வளனார் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, திருப்பலி டிச.26 மாலை 5.30 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் நடக்கிறது. டிச.,27 மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி மற்றும் பொன்விழா மலர் வெளியீடு, இன்டர்நெட் துவக்கம், பட்டிமன்றம் அகிய நிகழ்வுகள் நடைபெறும். 28 காலை 7.30 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, ஆசீர் நடக்கிறது என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.