2010-12-23 15:05:18

டிசம்பர் 24 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1294 – திருத்தந்தை 8ம் போனிபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்மஸ் இரவு வழிபாட்டுக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.

1777 – கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிட்டிமாட்டியை ஜேம்ஸ் கூக் கண்டுபிடித்தார்.

1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்

1914 – முதல் உலகப் போரில் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்காகப் போர் நிறுத்தம் தொடங்கியது.

1924 – அல்பேனியா குடியரசானது

1939 – திருத்தந்தை 12ம் பத்திநாதர் இரண்டாம் உலகப் போரின் போது, கிறிஸ்மஸ் திருவிழிப்பை முன்னிட்டு அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

1951 – லிபியா, இத்தாலியிடமிருந்து விடுதலை பெற்றது

1954 - லாவோஸ் விடுதலை பெற்றது

1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது



1524 ல் போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோ ட காமாவும்,

1973 ல் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்த ஈ. வெ. இராமசாமியும்

1987 ல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனும்

2005ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கமும் இறந்தனர்








All the contents on this site are copyrighted ©.