2010-12-22 15:24:55

சிறார் இயேசுவின் பிறப்பை உரோம் கடைக்காரர்க்கு நினைவுபடுத்துகின்றனர்


டிச.22,2010. உரோம் மாநகரில் எங்கு பார்த்தாலும் கிறிஸ்மஸ் கடைகள் நிரம்பியிருக்கும் இந்நாட்களில், இந்தப் புனிதக் காலத்தை நினைவுபடுத்தும் விதமாகச் சிறார் பாலன் இயேசுவைத் தாங்கிய வண்ணம் நகரின் தெருக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Focolare என்ற கத்தோலிக்க இயக்கத்தின் சிறார் பிரிவைச் சேர்ந்த 4க்கும் 12 வயதுக்கும் உட்பட்ட சிறார் இவ்வாறு செய்து வருகின்றனர்.

“அவர்கள் இயேசுவை வெளியேற்றி விட்டனர்” என்ற சுலோகங்களுடன் பாலன் இயேசுவை வைக்கோல் படுக்கையில் வைத்து அதனை ஏந்தி வரும் இச்சிறார், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றியது என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த முயற்சித்து வருகின்றனர்.

அத்துடன் சாலைகளில் இச்சிறார் எடுக்கும் உண்டியல் பாகிஸ்தானில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் மறைப்பணியாளர்க்கென அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.