2010-12-22 15:23:57

ஆஸ்திரேலியாவில் சுமார் ஆயிரம் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணையத் திட்டம்


டிச.22,2010. கத்தோலிக்கத் திருச்சபையில் இணைய விரும்பும் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்களுக்கென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உருவாக்கியுள்ள சிறப்பு அமைப்பின் வழியாகச் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் சேரவிருப்பதாக ஆஸ்திரேலிய ஆங்லிக்கன் பேராயர் ஜான் ஹெப்வெர்த் அறிவித்தார்.

கத்தோலிக்கர், பாரம்பரிய ஆங்லிக்கன் குழுவினர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய கமிட்டி, வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் ஆங்லிக்கன் கிறிஸ்தவச் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபையில் இணைபவர்களை மேற்பார்வையிடும்.

இது குறித்துப் பேசிய பேராயர் ஹெப்வெர்த், கத்தோலிக்கத்தில் சேரும் ஆங்லிக்கன் குழுவினர் தங்களது திருச்சபை சொத்துக்களை வைத்திருப்பதற்கு, இங்கிலாந்தில் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் அனுமதித்தது போல ஆஸ்திரேலியாவிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்தச் சொத்து விவகாரம் ஆங்லிக்கன் சபையினர் கத்தோலிக்கத்தில் சேருவதற்கு ஒரு தடையாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.