2010-12-21 15:38:12

விவிலிய மதிப்பீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் கிறிஸ்தவப் பணியாளர்கள் இலஞ்ச ஊழலை எதிர்த்துப் போராட முடியும்


டிச 21, 2010. தாங்கள் பணிபுரியும் இடங்களில் விவிலிய மதிப்பீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் கிறிஸ்தவப் பணியாளர்கள் இலஞ்ச ஊழலை எதிர்த்துப் போராட முடியும் என்ற அழைப்பை முன்வைத்தார் இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் அவையின் தலைவர் ஆயர் ஆஸ்வால்டு லேவிஸ்.

கடந்த வார இறுதியில் இந்தோரில் இடம்பெற்ற கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பின் பயிற்சிமுகாமை துவக்கிவைத்து உரையாற்றிய ஆயர், தங்கள் பணிக்கு விசுவாசமுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் இலஞ்ச ஊழலை ஒழிக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கிறிஸ்தவப் பணியாளரும் தங்கள் வேலையை கடவுளின் அழைப்பாக ஏற்று பொறுப்புணர்வுடனும் விசுவாசத்துடனும் அதனை ஏற்று நடத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன் வைத்தார் ஜெய்ப்பூர் மறைமாவட்ட ஆயர் ஆஸ்வால்டு லேவிஸ்.

கர்தினால் Joseph Cardijn 1926ஆம் ஆண்டு துவக்கிய கிறிஸ்தவத் தொழிலாளர்களின் உலக அமைப்போடு இணைந்துள்ள இந்திய கிறிஸ்தவத் தொழிலாளர் இயக்கத்தின் இந்திய பிரிவு சென்னையிலிருந்து இயங்கி 52 மறைமாவட்டங்களில் தன் கிளைகளைக் கொண்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.