2010-12-21 15:42:07

முஸ்லீம் தீவிரவாதிகள் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலுமாக வெளியேற்ற விரும்புகின்றனர், எகிப்தியக் குரு கவலை


டிச.21,2010. ஒருகாலத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மதத்தவராய் இருந்த மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அம்மக்களை முழுவதும் அகற்றுவதற்கு முஸ்லீம் தீவிரவாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்று எகிப்தியக் குரு ஒருவர் குறை கூறினார்.

எகிப்தியக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேச்சாளரான அருட்திரு Rafic Greische வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்ற விரும்புகின்றனர், இதுதான் அங்கு ஒவவொரு நாளும் இடம் பெற்று வருகிறது, அப்பகுதியிலுள்ள அரசுகளும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குக் கடும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என அக்குரு கூறினார்.

எகிப்தியக் கிறிஸ்தவர்கள் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாகுபடுத்தப்படுகின்றனர், ஆலயங்கள் கட்டுவதற்குக்கூட அவர்களால் இயலவில்லை என்றும், கிஜா நகரில் ஆலயம் கட்ட உரிமை கேட்டுக் கடந்த நவம்பரில் ஊர்வலம் சென்ற கிறிஸ்தவர்களில் 150க்கும் மேற்பட்டோர் இன்னும் சிறையில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். இவர்களில் சிறாரும் உள்ளடங்குவர்.








All the contents on this site are copyrighted ©.