2010-12-21 15:35:25

அரசியல்வாதிகள் ஜெபிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் இத்தாலிய ஆயர் பேரவை தலைவர்.


டிச 21, 2010. சமூகத்தில் அனைத்துப்பிரிவு மக்களிடையேயும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க உதவும் வண்ணம் அனைத்து அரசியல்வாதிகளும் இறைவனுடனான தங்கள் உரையாடலை பலப்படுத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இத்தாலிய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ.

இத்தாலிய செனட் அவையில் கிறிஸ்துமஸ்காலத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால், மனிதனைத்தேடி அவனோடு தன்வாழ்வையும் நட்பையும் பகிர வந்து நம் இதய வாசலில் காத்திருக்கும் இயேசுவுக்கான நம் பதில் மொழி என்ன என்ற கேள்வியை முன் வைத்தார்.

இறைவனின் வார்த்தைகளின் ஒளியையும் நம் ஜெபத்தின் வலிமையையும் நாம் உணர்ந்துள்ளோமா என்ற கேள்வியையும் அரசியல்வாதிகள் முன் வைத்தார் கர்தினால் பஞ்ஞாஸ்கோ. ஒவ்வொரு செனட் அவை அங்கத்தினரும் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து, நேர்மையுடனும் தெளிவுடனும் ஆன்மீக மேன்மைத் தன்மையுடனும் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இத்தாலிய ஆயர் பேரவை தலவர்.








All the contents on this site are copyrighted ©.