2010-12-20 15:13:18

டிசம்பர் 21 நாளும் ஒரு நல்லெண்ணம்


இருபதாம் நூற்றாண்டு இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டது.( முதல் உலகப் போர் 1914-1918, 2ம் உலகப் போர் 1939-1945 ) அந்த நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் செர்பியா மீது ஆஸ்திரியாவுக்குப் பகை. பிரான்ஸ் மீது ஸ்பெயினுக்குக் கோபம். பிரிட்டன் மீது ஜெர்மனிக்கு வெறுப்பு. இப்படிப் பகை மூட்டம் நாடுகளை மூடியிருந்தது. அதேசமயம் சமாதானத்துக்கும் சமரசத்துக்குமான வழிகளுக்கு எவரும் முயற்சிக்கவில்லை. 1941, டிசம்பர் 21ம் தேதி ஜப்பானும் தாய்லாந்தும் நேசநாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1914ம் ஆண்டில் சுற்றுப் பயணத்திலிருந்த ஆஸ்திரிய இளவரசன் ஃபிரான்ஸ் பெர்டினாண்டை செர்பிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொன்றான்.(1914, ஜூன் 28). உடனே ஆஸ்திரியா செர்பியா மீது போர் தொடுத்தது. முதல் உலகப் போரும் தொடங்கியது. உலகமெங்கும் மூன்று கோடி மக்களுக்கு மேல் பலியாகினர்.

தென்னாப்ரிக்காவில் மகாத்மா காந்தியை ஒரு வெள்ளையன் இரயில் பெட்டியில் அவமானப்படுத்தினான். அந்த நிகழ்வு காலனி இந்தியாவின் வரலாற்றையே புரட்டிப் போட்டது.

ஒரு சிறு நிகழ்வு பெரும் நிகழ்வுகளுக்கு வித்திடுகிறது.








All the contents on this site are copyrighted ©.