கிறிஸ்து பிறப்பு நாள் நெருங்கி வருகிறது. இவ்விழாவை எப்படி கொண்டாடுவதென்று சில திட்டங்கள்
நாம் தீட்டியிருப்போம். இதோ இன்னும் சில ஆலோசனைகள்... முடிந்தால், நிறைவேற்ற முயற்சி
செய்யலாமே!
கடைகளில் கிறிஸ்மஸ் பொருட்கள் வாங்கும்போது, அங்கு வேலை
செய்பவர்களிடம் கனிவாய்ப் பேசுங்கள். விழாக் காலங்களில் அவர்கள் வேலை பல மடங்காகியிருக்கும். ஒவ்வோர்
ஆண்டும் கிறிஸ்மஸ் நேரத்தில் குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
பல ஆண்டுகள் சென்று, அடுத்தத் தலைமுறைக்கு உங்கள் குடும்பக் கதையை இப்படங்கள் அழகாகச்
சொல்லும். கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத ஒரு குடும்பத்துடன் உங்கள் கிறிஸ்மஸ் உணவைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
இருளில், குளிரில், மிருகங்கள் தங்கும் அழுக்கான
ஒரு தொழுவத்தில் முதல் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. இதை எப்போதும் நினைவில் கொள்வோம்.