2010-12-18 15:12:17

டிசம்பர் 20, அனைத்துலகத் தோழமை நாள்


டிச.18,2010. 2015ம் ஆண்டுக்குள் உலகின் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கு நாடுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும் மக்களுக்குள்ளும் நாடுகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் காணப்படுகின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.

பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறும் பான் கி மூன், உலகின் பொருளாதார நெருக்கடி மேலும் 6 கோடியே 40 இலட்சம் பேரை வறுமைக்குள் நுழைத்துள்ளது என்று தெரிவித்தார்.

வேலை வாய்ப்பின்மை, 2007ம் ஆண்டிலிருந்து மூன்று கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 20, இத்திங்களன்று அனைத்துலகத் தோழமை நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் தன்னைவிட வறுமையில் வாழ்வோர், நோயாளிகள், முதியோர், உரிமைகள் மறுக்கப்படுவோர், பாகுபடுத்தப்படுவோர் போன்றோருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறு இவ்வுலக தினத்தில் அழைப்பு விடுப்பதாகவும் அவர் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.