2010-12-17 15:48:19

கிறிஸ்தவர்கள் அமைதிக்கு எடுத்துக்காட்டாய் இருக்குமாறு ஒரிசா பேராயர் வலியுறுத்தல்


டிச.17,2010. கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வர வர, கந்தமால் மாவட்டக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சமும் அதிகரித்து வருவதாக கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் தெரிவித்தார்.

ஒரிசாவின் கந்தமால் மாவட்டக் கிறிஸ்தவர்கள் 2007ம் ஆண்டு டிசம்பர் மாத நினைவுகளின் பாதிப்புக்களிலிருந்து இன்னமும் விடுபடாத சூழலில் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலம் அவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பேராயர் சீனத் மேலும் கூறினார்.

கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்வுச் சூழல் நீக்கப்படுவதற்கு உதவியாக இருபால் துறவிகளும் பொதுநிலை விசுவாசிகளும் அமைதிக்கு எடுத்துக்காட்டாய் இருக்குமாறு கேட்டுள்ள பேராயர், கிறிஸ்துமஸ் காலத்தில் இந்துக்களுடன் அமைதியும் நல்லிணக்கமும் கொண்டு வாழுமாறு வலியுறுத்தியுள்ளார்.

2007, 2008ம் ஆண்டுகளில் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைகளை எதிர் கொண்ட பின்னர் அவர்களுக்குக் கிறிஸ்துமஸ் அர்த்தமுள்ளதாக இருக்கின்றது என்று பேராயர் சீனத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.