2010-12-16 15:12:01

டிசம்பர் 17 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருநாள் அந்தக் காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் கூட்டம் ஒன்றை நடத்தின. அங்கு வந்திருந்த எல்லா இனங்களும் தங்களைப் பற்றித் திருப்தியில்லாமல் பேசிக் கொண்டிருந்தன. பறவைகள், எங்களால் பறக்க முடிகின்றது, ஆனால் நீந்தவோ குழி பறிக்கவோத் தெரியவில்லை என்றன. முயல் கூட்டமோ, எங்களால் வேகமாக ஓட முடிகின்றது, ஆனால் நீந்தவோ பறக்கவோத் தெரியவில்லை என்றன. இப்படி ஒவ்வொன்றும் தங்களைப் பற்றிக் குறைவாகப் பேசின. எனவே தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு கல்லூரியை உருவாக்க அவை தீர்மானித்தன. கல்லூரியும் தொடங்கப்பட்டது. வகுப்புகளும் பயிற்சிகளும் தொடங்கின. நடைமுறை இறுதித் தேர்வும் வந்தது. முயல், ஓட்டத்தில் நம்பர் ஒன் ஆக வந்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றது. அதேசமயம் அதனை ஒரு மரக்கிளை மீது அமரவைத்து “பற பற” என்று ஊக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பறக்க முயற்சித்த போது கீழே தரையில் விழுந்து அடிபட்டது. அதன் இரண்டு கால்களும் முறிந்தன. எனவே இந்தத் தேர்வில் அது தோல்வியடைந்தது. அடுத்து ஒரு பறவைக்கான தேர்வு. அது பறப்பதில் நம்பர் ஒன் ஆக வந்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றது. ஆனால் ஒரு மச்சம் போன்ற அளவுக்குக் குழி தோண்டுமாறு அதனிடம் சொல்லப்பட்ட போது. அதில் படுதோல்வி அடைந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்தப் பறவையால் துளை போட முடியவில்லை. மாறாக அதற்குப் பிறகுச் சரியாகப் பறக்க முடியாத அளவுக்கு அது தனது இறக்கைகளையும் அலகையும் மிக மோசமாகச் சேதப்படுத்தியது.

இந்தக் கட்டுக் கதையை எழுதிய Buscaglia என்ற எழுத்தாளர் சொல்கிறார் : மீன் மீனாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஒரு நேர்த்தியான மீன் வியத்தகு மீனாகத்தான் இருக்க முடியுமே தவிர பறவையாகவோ முயலாகவோ ஆக. முடியாது.

இறைவா, மாற்ற வேண்டியதை மாற்றவும் மாற்ற முடியாததை ஏற்பதற்குமானத் தைரியத்தையும் இவையிரண்டிற்குமுள்ள வேறுபாட்டை அறியும் ஞானத்தையும் எனக்குத் தாரும்.







All the contents on this site are copyrighted ©.