2010-12-15 15:56:58

மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு நேரிடைச் சவாலாக இருக்கின்றன


டிச.15,2010. இந்தியாவின் பல மாநிலங்களில் அமலில் இருக்கும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு நேரிடைச் சவாலாக இருக்கின்றன என்று தலித் மக்களுக்கான ஆலோசகர் ஜேம்ஸ் மாசே கூறினார்.

இச்சட்டங்கள், நாட்டின் சமயச் சார்பற்ற அமைப்பின் நாடித் துடிப்பையே தாக்குவதாக இருக்கின்றன என்று, தலித் மக்கள் குறித்த ஆய்வுகள் மையத்தின் இயக்குனரான ஜேம்ஸ் தெரிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் பல மாநிலங்களில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் நோக்கத்தில் அதனைச் சட்டமாக ஆக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், கிறிஸ்தவராக அல்லது முஸ்லீமாக மக்கள் சுதந்திரமாக மாறுவதற்கு எதிரான சில மதங்களின் அடிப்படைவாதிகளின் பெரும் செயல்களாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அருணாச்சலப் பிரதேசம், சட்டிஸ்கார், குஜராத், இமாலயப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தற்சமயம் மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் இருக்கின்றது.

சுமார் 115 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் 80 விழுக்காட்டினர் இந்துக்கள். 13 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 2 விழுக்காட்டினர் மட்டுமே கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.