2010-12-14 15:07:13

கத்தோலிக்க ஆயர் ஒருவருக்கு Right Livelihood விருது


டிச.14,2010. பிரேசில் நாட்டுப் பூர்வீக இன மக்களின் உரிமைகளின் பாதுகாப்புக்காக உழைத்து வரும் கத்தோலிக்க ஆயர் Erwin Kräutler என்பவருக்கு நொபெல் விருதுக்கு இணையான Right Livelihood என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்கும் பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்காகவும் உழைத்து வரும் ஆயருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக கடந்த திங்களன்று சுவீடன் நாடாளுமன்றம் இவ்விருதை வழங்கியுள்ளது.

இவ்விருதைப் பெற்று உரையாற்றிய ஆயர் Kräutler, பிரேசில் நாட்டு அமேசானின் Xingu பகுதியில் வாழும் பூர்வீக இன மக்கள் தற்சமயம் பெலோ மலையில் கட்டப்படும் நீர்த்தேக்கம் குறித்த அச்சுறுத்தலையும் எதிர் நோக்கி வருகின்றனர் என்றார்.








All the contents on this site are copyrighted ©.